SURA TO BE RELEASED ON APRIL 30

Wednesday, April 14, 2010


"வேட்டைக்காரன்' படத்தையடுத்து விஜய் நடித்துள்ள அவரது 50}வது படமான "சுறா', ஏப்ரல் 30}ம் தேதி வெளியாகிறது. அவருடைய 51}வது படத்தை மலையாள இயக்குநர் சித்திக் இயக்குகிறார். "பாடிகார்ட்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் ஆக உருவாகும் இந்தப் படத்துக்கு "காவல்காரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் விஜய் ஜோடியாக அஸின் நடிக்கிறார். ராஜ்கிரணின் மகளான அஸினுக்கு எதிரிகளால் ஆபத்து; அதற்காக விஜய்யை பாடிகார்டாக நியமிக்கிறார் ராஜ்கிரண். பாதுகாப்புக்கு வந்த விஜய் காவலோடு காதலையும் கச்சிதமாகச் செய்கிறார். இதையடுத்து ஏற்படும் பிரச்னைகளை மையமாக வைத்து படம் தயாராகிறது. இந்த தலைப்போடு "உரிமைக்குரல்', "மீனவ நண்பன்', "எங்கள் தங்கம்' உள்ளிட்ட சில எம்.ஜி.ஆர். பட டைட்டில்களின் உரிமையையும் பெற்றுள்ளது விஜய் தரப்பு.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=226289&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=

0 comments: